William Branham - Robin Bird's Story

13 विचारों
admin
admin
06/20/24

#williambranham #messagebelievers #endtimemessagebelievers

59-0419A - என் சுய சரிதை
Rev. William Marrion Branham

ராபின் பறவைகளை நான் எப்பொழுதுமே நேசிக்கிறேன். இப்பொழுது தேசத்தில் வானொலியினூடாக கேட்கின்ற பையன்களாகிய உங்களைத்தான், என்னுடைய பறவைகளைப் பார்த்து சுடாதேயுங்கள். நீங்கள் பாருங்கள், அவைகள்—அவைகள்…அவைகள் என்னுடைய பறவைகள். அதனுடைய சிவந்த மார்பை அது எப்படி பெற்றது என்ற ராபின் பறவையைக் குறித்த கட்டுக்கதையை நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? நான் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தவுள்ளேன். அதற்கு எப்படி அதனுடைய சிவப்பு மார்பகம் கிடைத்ததென்றால்…ஒரு நாளன்று இராஜாதி இராஜா அங்கே சிலுவையில் மரித்துக்கொண்டிருந்தார். அவர் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருவரும் அவரிடமாய் வரவில்லை. அவருக்கு உதவி செய்வார் ஒருவரும் இல்லாதிருந்தது. அங்கே ஒரு பழுப்பு நிற பறவையொன்று சிலுவையிலிருந்த அந்த ஆணிகளை எடுத்துவிட விரும்பியதாம். அது தொடர்ந்து சிலுவையை நோக்கி பறந்து வந்து ஆணிகளை அசைத்துக் கொண்டிருந்ததாம். அவைகளை வெளியே இழுக்க அது மிகவும் சிறியதாயிருந்ததாம். அப்பொழுதே இரத்தத்தினால் முழுவதும் சிவந்த அதனுடைய சிறிய மார்பை அது பெற்றுக்கொண்டதாம். அது முதற்கொண்டு அதனுடைய மார்பு சிவப்பாகவே இருக்கிறது. பையன்களே அதை சுட்டுவிடாதீர்கள். அதை மட்டும் விட்டு விடுங்கள்.

और दिखाओ

0 टिप्पणियाँ इसके अनुसार क्रमबद्ध करें

कोई टिप्पणी नहीं मिली

अगला